IRE vs SA, 2nd T20I: டேவிட் மில்லர் அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்பெஸ்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
ஆனால் அந்த அணியில் கேப்டன் டெம்பா பவுமா, ஜென்மேன் மாலன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினர். பின்னர் வந்த ஐடன் மார்க்ரம், வென்டர் டுசென் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 58 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 100 ரன்களை கூட தென் ஆப்பிரிக்க அணி எட்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டேவிட் மில்ல - வியான் முல்டர் இணை களத்தில் இருங்கியது.
இதில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் அரைசதமடித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கையளித்தார். மறுமுனையில் அவருக்கு துணையாக விளையாடி வந்த முல்டர் 36 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை விளையாடிய மில்லர் 4 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 75 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் பால் ஸ்டிர்லிங், மார்க் அதிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.