IRE vs SA: அயர்லாந்தை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Jul 25 2021 09:28 IST
Image Source: Google

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டில் பெல்ஃபெஸ்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய டெம்மா பவுமா - ரீசா ஹென்ரிக்ஸ் இருவரும் அரைசதமடித்து அசத்தினர். மேலும் இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி கடின இலக்கை நிர்ணயிக்க உதவினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 72 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 69 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இலக்கை துரத்திய ஐயர்லாந்து அணி எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தென் ஆபிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டெம்பா பவுமா ஆட்டநாயகனாகவும், டேவிட் மில்லர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை