அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Aug 12 2022 14:52 IST
Image Source: Google

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  •     இடம் - பெல்ஃபெஸ்ட் மைதானம்
  •     நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

ஆஃப்கானுடனான முதலிரண்டு டி20 போட்டிகளிலும் அயர்லாந்து அணி பேட்டிங், பவுலிங் என இரு தரப்பிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது. 

அதிலும் பேட்டிங்கில் கேப்டன் பால்பிர்னி, லோர்கன் டக்கர், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். பந்துவீச்சில் ஜார்ஜ் டெக்ரேல், ஜோஸுவா லிட்டிலும், கரேத் டெலானி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது பெரும் பின்னடவை ஏஎற்படுத்தியுள்ளது. அதிலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புவது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் அசத்தும் பட்சத்தில் இனி வரும் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இன்றைய போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தால் டி20 தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 20
  •     ஆஃப்கான் வெற்றி - 14
  •     அயர்லாந்து வெற்றி - 6

உத்தேச அணி

அயர்லாந்து- பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்.

ஆஃப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கானி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக்.

ஃபேண்டஸி லெவன்

  •          விக்கெட் கீப்பர் - லோர்கன் டக்கர்
  •          பேட்டர்ஸ் - ஆண்டி பால்பிர்னி, ஹாரி டெக்டர், உஸ்மான் கானி, ஹஸ்ரதுல்லா ஜசாய்
  •          ஆல்-ரவுண்டர்கள் - பால் ஸ்டிர்லிங், முகமது நபி
  •          பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், பேரி மெக்கார்த்தி, முஜீப் உர் ரஹ்மான், ஜோசுவா லிட்டில்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை