அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - கவுண்டி மைதானம், பிரிஸ்டோல்
- நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் வெற்றிபெற்று அசத்தியது.
ஆனாலும் டி காக், வெண்டர் டூசென், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் ஷம்ஸி, மஹாராஜ் உள்ளிடோர் சிறப்பாக செயல்பட்டாலும், ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர்.
அதேசமயம் அயர்லாந்து அணியில் லோர்கன் டக்கர் முதலாவது டி20 போட்டியில் அபாரமாக செயல்பட்டு அரைசதம் கடந்தார். ஆனாலும் ஸ்டிர்லிங், பால்பிர்னி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் வெற்றியை ஈட்டும்.
அதேபோல் பந்துவீச்சில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி, மார்க் அதிர் உள்ளிட்டோர் இருப்பது நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு தலைவலியை ஏற்படுத்துமெ என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 4
- தென் ஆப்பிரிக்கா வெற்றி - 4
- அயர்லாந்து - 0
உத்தேச அணி
அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில்.
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ் (கே), லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், லோர்கன் டக்கர்
- பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ரீஸ் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் டாக்ரெல்
- ஆல்-ரவுண்டர்கள் - டுவைன் பிரிட்டோரியஸ், கரேத் டெலானி, ஆண்டி மெக்பிரைன்
- பந்துவீச்சாளர்கள் - ஜோசுவா லிட்டில், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி