மகளிர் கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அயர்லாந்து !
ஸ்காட்லாந்து மகளிர் - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி லியா பாலின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இறுதியில் மேகன் மெக்கல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேகன் மெக்கல் 30 ரன்களை எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் லியா பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேபி லீவிஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் 13.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கேபி லீவிஸ் ஆட்ட நாயகியாகவும், லியா பால் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.