IREW vs SAW, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!

Updated: Sat, Jun 04 2022 11:08 IST
Image Source: Google

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு லியா பால் - கேபி லூயிஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 98 ரன்களைச் சேர்த்தனர்.

இதில் கேபி லூயிஸ் அரைசதம் அடித்து அசத்தார். அதன்பின் லூயிஸ் 52 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லியா பால் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பின்ன களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியில் லாரா குடால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் டஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்களிலும், அன்னே போஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் லாரா வொல்வர்ட்ஸ் 20, சுனே லுஸ் 23, சோலே ட்ரையன் 26 என அடுதடுத்து விக்கெட்டுகளைக் இழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை