IREW vs SCOW : லியா பால் பந்துவீச்சில் சுருண்ட ஸ்காட்லாந்து!

Updated: Wed, May 26 2021 15:15 IST
Image Source: Google

ஸ்காட்லாந்து மகளிர் அணி  அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. 

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேபி லீவிஸ் அதிரடியாக விளையாடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேபி லீவிஸ் 47 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீராங்கனைகள் லியா பால் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் ஸ்காட்லாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் அயர்லாந்து மகளிர் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை