தொடரை வென்றாலும், இந்திய அணியில் இன்னும் இந்த பிரச்சனை உள்ளது - இர்ஃபான் பதான்

Updated: Mon, Nov 22 2021 21:38 IST
Irfan Pathan Pointed Out Middle Order Batting An Area Of Concern Despite T20I Series Win Over New Ze (Image Source: Google)

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராக தொடங்கிவிட்டது.

உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அறிமுகமாகி அபாரமாக ஆடினர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், சிறப்பான பவுலிங்கும் தான் காரணம். இந்த தொடரில் ஆடிய 3 போட்டிகளிலுமே இந்திய தொடக்க ஜோடி 50 ரன்களுக்கு மேல் குவித்தது. 

இப்படியாக, இந்திய அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்திருந்தாலும், மிடில் ஆர்டர் பிரச்னை பெரும் பிரச்னையாகவே இருந்துவருகிறது. அதைத்தான் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் இர்ஃபான் பதான்.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், “ரிஷப் பந்த்தின் பேட்டிங்கை பொறுத்தமட்டில் அவரது ஷாட் செலக்‌ஷனில் அவர் இன்னும் கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது ஷாட் செலக்‌ஷனில் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. 2020லிருந்து இதுவரை 6-7 முறை ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடமுயன்று ஆட்டமிழந்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரும் ரிஸ்க்கான வீரர்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை