வக்கார் யூனிஸுக்கு பதிலடி கொடுத்த இர்ஃபான் பதான்!

Updated: Sun, Aug 21 2022 16:54 IST
Image Source: Google

ஆசிய கோப்பை தொடர் வரும் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் ஒரு தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியும் பங்கேற்கிறது.

இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் ஷா அஃப்ரிடி, காயம் காரணமாக விலகினார். அவரின் விலகலால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஃப்ரிடி, தற்போது வரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தானுக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி , பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றதுக்கு காரணம் ஷாயின் ஷா அப்ரிடி தான்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவையும், 3வது ஓவரில் ராகுலையும் ஆட்டமிழக்க செய்தார் ஷாயின் ஷா அப்ரிடி. அந்த ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 31 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஃப்ரிடி. இதனை வைத்து தான் தற்போது இந்திய வீரர்களை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் வம்பிழுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஷாயினுக்கு ஏற்பட்டுள்ள காயம், இந்திய அணியின் முன்வரிசை வீரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்.ஆசிய கோப்பையில் அப்ரிடியை காண முடியாதது வருத்தம் தான். மீண்டும் விரைவில் உடல் தகுதியை எட்ட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை அவருடைய ஸ்பெஷல் இன்னிங்சை காட்டவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 70 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் வக்கார் யூனிஸ்க்கு ரோஹித் சர்மா தனது பேட் மூலம் பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் விலகியுள்ளது சில அணிகளுக்கு சாதகமாக இருக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை