ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷுவா லிட்டில்; வைரல் காணொளி!

Updated: Fri, Nov 04 2022 12:16 IST
Irish fast bowler Joshua Little picked up the second hat-trick of T20 World Cup 2022 (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் நியூசிலாந்து அணி அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியும். இதனால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பின் ஆலன் 32, டெவான் கான்வே 28 இருவரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து நடையைக் கட்டினர். அடுத்து கிளென் பிலிப்ஸும் 17 அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ஓபனர் வில்லியம்சனுடன், டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இதனால், ஸ்கோர் கிடுகெடுவென உயர்ந்தது. நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 173/3 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது பந்துவீச வந்த ஜோஷுவா லிட்டில் அபாரமாக பந்துவீசி அசத்தினார்.

18.2ஆவது ஓவரில் வில்லியம்சன் (61) விக்கெட்டை வீழ்த்திய லிட்டில், அடுத்து 18.3, 18.4 ஆகிய பந்துகளில் ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரை கோல்டன் டக் ஆக்கி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சென்றது.

இறுதியில் மிட்செல் கடைசி ஓவரில் 3 முறை இரண்டு ரன்களை அடித்ததால், 9 ரன்கள் கிடைத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 185/6 ரன்களை குவித்தது. மிட்செல் 31 (21), சௌதீ 1 (2) களத்தில் இருந்தனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதன்மூலம், டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ள நாட்டிற்கு எதிராக, டெஸ்ட் விளையாடாத நாட்டை சேர்ந்தவர் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் என்ற உலக சாதனையைப் படைத்தார். இதற்குமுன், தகுதி சுற்றில் அமீரக வீரர் மெய்யப்பன், இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை மொத்தம் இந்த இரண்டு வீரர்கள் மட்டுமே படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை