ஐபிஎல் 2022: ஆட்டமிழந்த விரக்தியில் இஷான் கிஷன் செய்த காரியம்; நடவடிக்கை பாயுமா?

Updated: Sat, Apr 16 2022 20:28 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை அணி விளையாடிய 6 போட்டியிலும் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது. பார்போன் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசியது.

100ஆவது போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் சதம் விளாசினார். இதன் மூலம் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி , தொடக்கத்தில் இருந்தே ரன் குவித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. எனினும் கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இஷான் கிஷனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவரால் பெரிய ஷாட் ஆட முடியவில்லை. 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி மட்டும் அடித்து 13 ரன்களையே சேர்த்தார். ஸ்டோனிஸ் வீசிய பந்தில் போல்ட் ஆகி இஷான் கிஷன் வெளியேறினார்.

இதனால் கடும் கோபத்தில் வெளியேறிய இஷான் கிஷன், பெவிலியன் நோக்கி கோபமாக நடந்தார். அப்போது எல்லைகோட்டில் பேட்டால் ஓங்கி அடித்தார். இதனால் அங்கிருந்த சக அணி வீரர்களே கொஞ்சம் மிரண்டனர். இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியதால், அதன் பிளே ஆஃப் கனவு 99.9 சதவீதம் முடிந்துவிட்டது.

 

இனி நடைபெற உள்ள 8 போட்டியில் அனைத்திலும் வென்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். கடந்த சீசனிலும் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. இம்முறையாவது பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என எதிர்பார்த்த மும்பை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இந்த விரக்தியால் தான் இஷான் கிஷன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் .

இஷான் கிஷானின் இந்த செயல் ஐபிஎல் ஒழுங்கு நடைமுறை விதியை மீறிய செயலாகும். இதனால் அவருக்கு அபராதமும் விதிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை