ENG vs SA: கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது - டீன் எல்கர்!

Updated: Thu, Aug 25 2022 08:13 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 25) மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "கடந்த போட்டியில் இங்கிலாந்து தொல்வி அடைந்தது என்பதை அறிந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் எங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையுடன் திரும்பி வருவார்கள் என்று எனக்குத் தெரியும். கிரிக்கெட்டின் மற்றொரு திடமான விளையாட்டை நாம் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். 

வெற்றியின் நிலையைப் பெற முயற்சிப்பதற்கு இது சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் மீண்டும் எங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். 

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது எங்களுக்கு ஆச்சரியமான ஒன்று. கடந்த ஆண்டு நாங்கள் விளையாடியது போல் திடமான, உறுதியான கிரிக்கெட்டை விளையாடினோம். மேலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் சில வெற்றிகளைப் பெற விரும்புகிறோம். 

ஆனால் எதிர்காலத்தை கணிப்பது கடினம், என்னால் முடியும் என்று நான் நம்புகிறேன். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் வெல்வோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை