ஆஷஸ் தொடர்: மைக்கேல் வாகனை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!

Updated: Tue, Dec 28 2021 20:45 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய - இன்ங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. 

இந்த போட்டியில் மூன்றாம் நாளான இன்றே ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சின் போது 68 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி பெரும் அவமானத்தைச் சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பெற்ற தோல்வியின் மூலம் அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை ட்விட்டர் வாயிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் படுபயங்கரமாக கலாய்த்துள்ளார். 
அதற்கு காரணம் யாதெனில், கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஹாமில்டன் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அப்போது அந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்த மைக்கல் வாகன் 100 ரன்களுக்குள் இந்தியா ஆல்-அவுட் ஆகிறது என்னால் நம்ப முடியவில்லை. இப்போதைய கிரிக்கெட்டில் 100 ரன்களுக்குள் ஒரு அணி ஆட்டம் இழப்பதா? என்று கிண்டல் செய்திருந்தார்.

 

இந்நிலையில் அதனை சரியாக ஞாபகம் வைத்திருந்த வாசிம் ஜாபர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மெல்போர்ன் மைதானத்தில் இன்று 2ஆவது இன்னிங்சில் 68 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனதும் அதனை குறிப்பிட்டு இங்கிலாந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் என ஒரு காணொளையை வெளியிட்டுள்ளார். 

அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை