ENG vs IND: இந்திய அணி லெவனைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!

Updated: Wed, Jun 18 2025 14:40 IST
Image Source: Google

ENG vs IND 1st Test: இந்திய அணியின் லெவனை தேர்ந்தெடுத்துள்ள வாசிம் ஜாஃபர் தனது அணியில், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ஆகாஷ்தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக முன்னாள் வீர்ர் வாசிம் ஜாஃபர் தனது லெவனை தேர்வு செய்துள்ளார். 

அந்தவகையில் வாசிம் ஜாஃபர் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இந்திய அணியின் லெவனை கணித்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்ததை அடுத்து அவர்களது இடத்தை நிரப்பும் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்ஷன் ஆகியோரில் யாரேனும் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறார். 

அதனால் மூன்றாம் இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்ஷன் இடம் பெற வேண்டும் கூறியுள்ளார். அதன்பின் நாம்காம் வரிசையில் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லையும், 5ஆம் இடத்தில் ரிஷப் பந்தையும் தேர்ந்தெடுத்துள்ள அவர், 6ஆம் வரிசையில் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இதுதவிர்த்து அணியின் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜாவையும், 8ஆவது இடத்தில் ஷர்தூல் தக்கூர் அல்லது குல்தீப் யாதவ் இடம்பிடிக்கலாம் என்று கூறியுள்ளார். 

மேலும் அவரது அணியின் வேகப் பந்துவீச்சு குறித்து பேசுகையில், இங்கிலாந்து நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ஆகாஷ்தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாசிம் ஜாஃபர் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

வாசிம் ஜாஃபர் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், அபிமன்யு ஈஸ்வரன்/சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை