ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இதன் காரணமாக பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணி 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்ற கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மற்றும் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இருவரும் வழக்கம் போல் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மைக்கேல் வாகன், இத்தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று கணித்திருந்தார். 

Advertisement

ஆனால் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்த பிறகு அவர் தனது கணிப்பை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்லும் என்று கூறியதுடன், இத்தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்றும் சூசகமாக கூறியுள்ளார். மேலும் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற உடனேயே, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பதிவில் "வாசிம் ஜாஃபர், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.. 1-0" என்று பதிவுசெய்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வாசிம் ஜாஃபர் தனது பதிவில், "ஒரு இளம் இந்திய அணி உங்களை இப்படி கவலையடையச் செய்ததில் மகிழ்ச்சி. வெற்றியை அனுபவியுங்கள், மைக்கேல், நாங்கள் திரும்பி வருவோம்" என்று தனது பதிலடியை கூறி இருந்தார். அதற்கு பதிலடிக்கும் விதமாக மைக்கேல் வாகன் அவரது பதிவை ரீட்வீட் செய்ததுடன் “இப்போது 4-0 ஆக இருக்கலாம் வாசிம்” என்று பதிவிட்டு வாசிமை மீண்டும் வம்பிழுத்துள்ளார். இவார்களது உரையாடல் தற்சமயம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தோல்வி இந்திய அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது, குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணியின் ஐந்து வீரர்கள் சதம் விளாசிய நிலையிலும், அணி தோல்வியைத் தழுவி டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையையும் படைத்துள்ளார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த போதிலும் ஒரு அணி தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. ஒருபக்கம் பேட்டர்கள் சிறப்பாக செயபட்ட நிலையிலும் அணியின் கீழ் வரிசை வீரர்கள் சோபிக்க தவறியது, பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவை மட்டுமே முழுமையாக சார்ந்திருப்பது என பல பிரச்சனைகளை இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி பதிலடியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News