டி20 உலகக்கோப்பை - பிரிட்டோரியஸுக்கு மற்றாக மார்கோ ஜான்சென் சேர்ப்பு!

Updated: Wed, Oct 12 2022 14:03 IST
Jansen named replacement for Pretorius in South Africa's T20 World Cup squad
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியிலும் இடம்பிடித்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக கடந்த மூன்றாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் டுவைன் பிரிட்டோரியஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் அப்போட்டியின் போது அவருக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்தும், வரும் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்தும் டுவைன் பிரிட்டோரியஸ் விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேசமயம் அவருக்கான மாற்று வீரர் யார் என்ற கேள்வியும் எழுந்து வந்தன. இந்நிலையில் இந்தியாவுடானான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மார்கோ ஜான்சென் தென் ஆப்பிரிக்க டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். மேலும் அவரது ரிசர்வ் வீரருக்கான இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் லிஸாட் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

தென் அப்பிரிக்க அணி : டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

கூடுதல் வீரர்கள்: பிஜோர்ன் ஃபோர்டுயின், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை