WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

Updated: Mon, Jul 18 2022 14:03 IST
Jason Holder returns to West Indies squad for ODI series against India
Image Source: Google

இங்கிலாந்தில் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்தாக 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் ஜேசன் ஹோல்டர் மீண்டும் இணைகிறார். வங்காதேசம் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமரா ப்ரூக்ஸ், கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை