இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டில் ஆட்சிமாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே அங்கு டி20 உலக கோப்பை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தொடரை அங்கு நடத்த முடியாத நிலையில் ஐசிசி வேறுநாட்டு தொடரை மாற்றுவது குறித்த ஆலோசனையில் இறங்கிவுள்ளது. இத்தொடர் வேறுநாட்டுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டால், அதனை இந்தியா, இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போடி தொடர் வேறுநாட்டுக்கு மாறும் பட்சத்தில் அதற்கு இந்தியா முதல் தேர்வாக இருக்கும் என்று கூறப்பட்டது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி வெறுநாட்டில் நடத்த திட்டமிட்டால், அது நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வங்கதேச நிலைமையை தொடர்ந்து, இந்தியாவில் உலகக் கோப்பை நடத்துவது குறித்து ஐசிசி முறையிட்டது. ஆனால், மழைக்காலம் என்பதால் இந்தியாவில் நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அடுத்தாண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்தும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.