இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - ஜெய்தேவ் உனாத்கட்

Updated: Tue, May 25 2021 16:09 IST
Jaydev Unadkat Upset At Not Being Picked In Extended India Squads
Image Source: Google

இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் இந்த போட்டிக்குப் பின்னர், இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது.

இந்த தொடர்களுக்கான இந்திய டெஸ்ட் அணி கடந்த 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் 20 முன்னணி வீரர்கள் மட்டுமல்லாமல், அர்சான் நக்வஸ்வாலா, அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா ஆகிய நான்கு பேக்கப் வீரர்களும் இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராக்கூட தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் உனாத்கட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“இங்கிலாந்து செல்ல விருக்கும் இந்திய அணியில் நான் நிச்சயமாக இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பேக்கப் வீரர்களே சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். எனவே ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்ட என் பெயரை நிச்சயமாக தேர்வுக் குழு பரீசீலணை செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய அணியில் என்னை ஒரு பேக்கப் வீரராக்கூட தேர்வு செய்யவில்லை. இந்திய தேர்வுக் குழுவின் இந்த செயல்பாடு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

29 வயதான உனத்கட், 2010ஆம் ஆண்டே தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி விட்டார். அந்த போட்டியில் மிக மோசமாக செயல்பட்ட அவர், அந்த போட்டியில் 26 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் 156 ரன்கள் விட்டுக் கொடுத்ததால், உடனடியாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அவர், தனது சீரற்ற பந்து வீசும் தன்மையின் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை