மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜூலன் கோஸ்வாமி!

Updated: Sat, Mar 12 2022 15:41 IST
Image Source: Google

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சீனிய வேகப்பந்து வீச்சாளர் 39 வயது ஜுலான் கோஸ்வாமி. இவர் இந்திய அணிக்காக 2002 முதல் விளையாடி வருகிறார். 12 டெஸ்டுகள், 198 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்திய அணிக்காக 275க்கும் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாடி மகத்தான வீரராக அறியப்பட்டுள்ளார். 

நியூசிலாந்தில் தனது 52aaவது உலகக் கோப்பையை விளையாடி வருகிறார் கோஸ்வாமி. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை இவர் தான். இதுவரை 249 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். வேறு எந்த வீராங்கனையும் 180 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்ததில்லை. 

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (39) எடுத்த பெருமையை இதற்கு முன்பு கொண்டிருந்தவர் ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டன். 52 வயதில் 2008-ல் காலமானார்.

இந்நிலையில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ஜுலான் கோஸ்வாமிக்குக் கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு  எதிரான இன்றைய ஆட்டத்தில் அனிசா முகமதை 2 ரன்களுக்கு வீழ்த்தினார் கோஸ்வாமி. இதையடுத்து 40 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்கிற புதிய சாதனையைப் படைத்தார். 

மகளிர் உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள்

  • 40 விக்கெட்டுகள் - ஜுலான் கோஸ்வாமி (31 ஆட்டங்கள்) 
  • 39 - லின் ஃபுல்ஸ்டன் (20 ஆட்டங்கள்)
  • 37 - கரோல் ஹாட்ஜஸ் (24 ஆட்டங்கள்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::