நியூசிலாந்திற்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; கேன் வில்லியம்சன் சாதனை!

Updated: Wed, Mar 05 2025 16:55 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சன்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்த கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணியும் 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் கேன் வில்லியம்சன் 27 ரன்களை எட்டியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 19ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 19ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் 370 போட்டிகளில் 440 இன்னிங்ஸ்களில் விளையாடி 19,000+ ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்திற்காக அதிக சர்வதேச ரன்களை எடுத்ததன் அடிப்படையில், வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 450 போட்டிகளில் 510 இன்னிங்ஸ்களில் விளையாடி 18,199 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அரைசதம் கடந்து விளையாடிவரும் கேன் வில்லியம்சன் தனது சதத்தை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை