ஸ்லோ ஓவர் ரேட் - ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அபராதம்!

Updated: Wed, Mar 30 2022 12:33 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் கடந்த சீசன் சரியாக அமையவில்லை. புள்ளிபட்டியலில் இந்த அணிகளும் கடைசி இரண்டு இடங்களை தான் பிடித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். மேலும், தேவ்தட் படிக்கல் 41 ரன்களுடனும் ஜாஸ் பட்லர் 35 ரன்களும் எடுத்தனர்.

பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வேகமாக விக்கெட்டுகளை விட்டு 37 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. பிறகு மார்க்ராம், ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர் போன்றோரின் ஆட்டத்தால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 57 (41) ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40 (14) ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு, ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை