கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கும் வில்லியம்சன்!

Updated: Tue, Dec 07 2021 11:24 IST
Image Source: Google

நியூசிலாந்து அணியின் வெற்றிகர கேப்டனாக பார்க்கப்படுபவர் கேன் வில்லியம்சன். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 2019 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி என பல சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. 

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் முழங்கையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதன் காரணமாக கேன் வில்லியம்சன் 7 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. 

மேலும் அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் நிச்சயம் 2 முதல் 3 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது தெரியவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை