IRE vs IND: சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து விமர்சித்த கபில்தேவ்!

Updated: Thu, Jun 16 2022 12:07 IST
Image Source: Google

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதி சுற்று வரை முன்னேற்றி சென்ற அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் விளையாடவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 458 ரன்கள் அடித்துள்ளார், ஓரிரு போட்டிகளை தவிர ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இவருடைய பங்களிப்பு அந்த அளவிற்கு இல்லை. அதேபோன்று சர்வதேச போட்டிகளிலும் இவர் மிக மோசமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுத்த போதும் அதை அனைத்தையுமே வீனடித்துள்ளார்.

இவர் இந்திய அணிக்காக 13 டி20 போட்டிகளில் பங்கேற்று, வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக இவர் இந்திய அணியிலிருந்து நீண்டகாலமாக புறக்கணிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் சஞ்சு சாம்சன் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,“(சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக்)இந்த 3 வீரர்களும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுகொடுத்துள்ளனர். நேர்மையாக சொல்ல போனால் விக்கெட் கீப்பிங்கில் அனைவரும் ஒரே சமமாக தான் உள்ளனர், ஆனால் பேட்டிங்கில் ஒவ்வொருவர்ம் ஒவ்வொருவருக்கு மேல் சிறப்பாக உள்ளனர், இவர்கள் மூவரும் இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர்” என்று பேசியிருந்தார்.

கபில் தேவின் இந்த கருத்து சஞ்சு சாம்சன் மற்ற மூவரை விட பேட்டிங்கில் சொதப்புகிறார் என்பதை சுட்டி காட்டும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டிய தலைமையில் அமைந்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை