இஷான் கிஷானுக்கு ஆதரவாகப் பேசிய கபில்தேவ்!

Updated: Thu, Jun 16 2022 16:49 IST
Image Source: Google

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது 2 - 1 என்ற நிலையில் உள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இளம் வீரர் இஷான் கிஷான் 76, 34, 54 ரன்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இஷான் கிஷான் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டாலும், ஐபிஎல் தொடரின் போதும் பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதற்கு காரணம் மும்பை அணி அவரை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதற்கு இஷான் கிஷான் நியாயமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தான். எனினும் இஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்தார். இது கடந்த 2 சீசன்களை விட அதிகம்தான் ஆகும்.

இப்படி இருக்கையில் பலரும், அவர் சரியாக ஆடவில்லை என நினைத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் ஒருபடி மேல் சென்று " இஷான் கிஷான் ரூ.15 கோடிக்கு வாங்குவதற்கெல்லாம் ஒன்றும் வொர்த் ( தகுதி ) இல்லை என பகிரங்கமாக கூறினார்.

இந்நிலையில் அதற்கு கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “அதிக தொகை தான் இஷான் கிஷானுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டது. எந்தவொரு அணி நிர்வாகமும் அவ்வளவு பணத்தை செலவு செய்ய முட்டாள்கள் கிடையாது. அந்த வீரரின் தரம் என்னவென்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் வீரர்கள் தான் அவ்வளவு பணத்தை கண்டு அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மிகப்பெரும் வீரர் யுவ்ராஜ் சிங்கிற்கே இதுபோன்று நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டு டெல்லி அணி அவரை ரூ.14 கோடிக்கு வாங்கியது. அவர் 14 போட்டிகளில் 376 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக், பதான் சகோதரர்கள் ஆகியோர் பெரும் பணத்திற்கு சென்று அழுத்தத்தால் சொதப்பியுள்ளனர். அதில் இருந்து இளம் வீரர்கள் மீண்டு வந்து சுதந்திரமாக ஆட வேண்டும்” என கபில் தேவ் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை