பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்ட்ஸி லெவன்!

Updated: Wed, Jun 09 2021 18:54 IST
CRICKETNMORE

ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி, முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ்
  • தேதி - 2021 ஜூன் 10 வியாழன்
  • நேரம் - மாலை 6:30 மணி
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

கராச்சி கிங்ஸ்

நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. 

கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் அசாம், மார்டின் கப்தி, வால்டன் உள்ளிட்ட டி20 ஸ்பெஷலிஸ்டிகள் இருப்பது அணியின் பேட்டிங் ஆர்டரை வலுவாக அமைத்துள்ளது. 

அதேசமயம் பந்து வீச்சில் முகமது அமீர், அர்ஷத் இக்பால், திசாரா பெரேரா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இவர்களது பங்களிப்பு அணிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

முல்தான் சுல்தான்ஸ்

முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

ரஹ்மனுல்லா குர்பஸ், ஜான்சன் சார்லஸ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பினும் மற்ற வீரர்கள் சரிவர தங்களது திறனை வெளிப்படுத்த தவறுகின்றனர். 

பந்துவீச்சில் சோஹைல் தன்விர், சோயிப் மசூத் ஆகியோ சிறப்பாக செயல்படும் பட்சத்தி அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

நேருக்கு நேர்

பிஎஸ்எல் டி20 தொடரில் இரு அணிகளும் இதுவரை எட்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கராச்சி கிங்ஸ் ஐந்து முறையும், முல்தான் சுல்தான்ஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இரண்டு போட்டி முடிவின்றி அமைந்துள்ளது.

உத்தேச அணி

கராச்சி கிங்ஸ்: ஷார்ஜீல் கான், பாபர் ஆசாம், மார்ட்டின் கப்தில், சாட்விக் வால்டன், திசாரா பெரேரா, இமாத் வாசிம் (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான், முகமது இலியாஸ், முகமது அமீர், வகாஸ் மக்சூத், அர்ஷத் இக்பால்

முல்தான் சுல்தான்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், குஷ்டில் ஷா, சோஹைல் தன்வீர், சோஹைப் மக்சூத், ரிலே ரோசோவ், சோஹைபுல்லா, சோஹைல் கான், உஸ்மான் காதிர், ஷாஹனாவாஸ் தானி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான் 
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம் , மார்ட்டின் கப்தில், ரிலே ரோசோவ், குஷ்டில் ஷா
  • ஆல்ரவுண்டர்கள் - இமாத் வாசிம், திசாரா பெரேரா, சோஹைல் தன்வீர்
  • பந்து வீச்சாளர்கள் - முகமது அமீர், உஸ்மான் காதிர், அர்ஷத் இக்பால்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை