Mohammad rizwan
PAK vs SL, Asia Cup 2023: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடி; இலங்கைக்கு 253 டார்கெட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை பிடிக்கு அணி எது? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
அதன்பின் இன்று நடைபெற்ற முக்கியமான் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.