தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!

Updated: Thu, Aug 24 2023 20:17 IST
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் அதிரடி வீரர் கௌதம் காம்பீர், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்தின. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது.

பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த கௌதம் காம்பீர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இணைந்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். தோனி 91 ரன்னுடனும், யுவராஜ் சிங் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நுவான் குலசேகரா வீசிய 48.2ஆவது ஓவரில் தோனி சிக்ஸர் அடிக்கவே இந்தியா 277 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான், தோனி அடித்த சிக்சர் மட்டுமே அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற வீரர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என்று கௌதம் காம்பீர் கூறியுள்ளார். 

 

இது குறித்து பேசிய அவர், “தோனி சிக்ஸர் அடித்ததனால் மட்டுமே இந்தியா உலகக் கோப்பையில் ஜெயிக்கவில்லை. அதில், யுவராஜ் சிங் விளையாடியிருக்கிறார், விராட் கோலி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் சேவாக் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். ஜாகீர்கான், முனாஃப் படேல், சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் என்று ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை