இந்த மூன்று வீரர்களையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - கெவின் பீட்டர்சன்

Updated: Thu, Aug 19 2021 13:29 IST
Kevin Pietersen wants England to field limited-overs batsmen in 3rd Test (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2ஆவது டெஸ்ட் நடைபெற்றது. அதில் இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்குச் சில யோசனைகள் அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “3வது டெஸ்டில் இங்கிலாந்து அணியை முழுவதுமாக மாற்ற விரும்புகிறேன். 5ஆம் நாளன்று இங்கிலாந்து அணி விளையாடியதை விடவும் அது மோசமாக விளையாடிவிடாது. அந்தளவுக்கு இங்கிலாந்து அணியின் பேட்டிங் கொடூரமாக இருந்தது.

இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு இந்த வயதில் நானே எவ்வித அழுத்தமும் இல்லாமல் பந்துவீச முடியும். இதனால் எவ்விதப் பயமும் இன்றி இந்திய அணியினர் பந்துவீசினார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் டேவிட் மலான், லியம் லிவிங்ஸ்டோன், ஹேரி புரூக் ஆகியோரை 3ஆவது டெஸ்டுக்குத் தேர்வு செய்யலாம். 

தி ஹண்ட்ரெட் தொடரில் புரூக் சிறப்பாக விளையாடினார். என்னைக் கவர்ந்துவிட்டார். பர்ன்ஸ், சிப்லி, கிராவ்லியை விடவும் நன்கு விளையாடுகிறார். 5 அல்லது 6ஆம் நிலை வீரராக லிவிங்ஸ்டோன் விளையாட வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு அவர் அழுத்தம் தருவார். உலகம் முழுக்க உள்ள லீக் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை அவரால் நன்கு எதிர்கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை