NZ vs BAN: கைல் ஜேமிசனுக்கு ஐசிசி அபராதம்!

Updated: Tue, Jan 11 2022 16:52 IST
Image Source: Google

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது வங்கதேச அணி. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி. 

இதையடுத்து 2ஆவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து அணி

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. யாசிர் அலி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றது. 

ஃபாலோ ஆன் ஆன வங்கதேச அணி மீண்டும் பேட்டிங் செய்யவேண்டிய நிலைமை உருவானது. இன்றும் நியூசிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி 79.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு வங்கதேச அணியை ஆட்டமிழக்கச் செய்தது. லிட்டன் தாஸ் 114 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜேமிசன் 4 விக்கெட்டுகளும் வாக்னர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இன்றுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் ராஸ் டெய்லர் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். 2-வது டெஸ்டை  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1-1 என டெஸ்ட் தொடரைச் சமன் செய்துள்ளது. 

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் அரை சதமெடுத்த யாசிர் அலியை ஆட்டமிழக்கச் செய்தார் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஜேமிசன். அப்போது யாசிர் அலியை ஜேமிசன் தரக்குறைவான வார்த்தைகளா திட்டியதாகத் தெரிகிறது. 

இதையடுத்து ஐசிசி விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஜேமிசனின் ஆட்ட ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதித்துள்ளது ஐசிசி. மேலும் ஓர் அபராதம் புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று முறை ஐசிசி விதிமுறைகளை மீறியதற்காக மூன்று அபராதப் புள்ளிகளை ஜேமிசன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை