ஐபிஎல் தொடர் டி20 உலகக்கோப்பை ஒரு பயிற்சியாக அமையும் - கைல் ஜேமிசன்

Updated: Tue, Aug 17 2021 19:34 IST
Kiwi pacer Kyle Jamieson eyes IPL 2021 as preparation ground for T20 World Cup (Image Source: Google)

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன். அந்த அணிக்காக கடந்தாண்டு முதல் விளையாடிவரும் ஜேமிசன், 8 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகவும் ஜேமிசன் அணியில் இடம்பிடித்துள்ளார். 

மேலும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இது பயிற்சியாக அமையும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஜேமிசன்,“டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் இது நல்ல ஒரு பயிற்சியாக அமையும். 

அதேசமயம் இந்த மைதானங்களும் எங்களுக்கு பழக்கப்படும். அதனால் உலகக்கோப்பை தொடரில் எந்த சிரமமும் இன்றி எங்களால் செயல்பட முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டி 20 கிரிக்கெட்டின் ஒரு தொகுதி உலகக் கோப்பைக்குச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது, நான் சொன்னது போல், நாங்கள் விளையாடப் போகும் இடங்களில் சில டி 20 திறன்களைப் பயிற்சி செய்ய ஒரு நல்ல வாய்ப்பு

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை