ஐபிஎல் 2022: புதிய மைல்கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!

Updated: Fri, Apr 01 2022 22:27 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் வீரர் உமேஷ் யாதவ் ஒரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகேஆர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் கேகேஆர் முன்னணி வேகப்பந்து விச்சாளர் என்ற பொறுப்பை ஏற்று கொண்ட உமேஷ் யாதவ் , அதற்கான பணியை சிறப்பாகவே செய்தார்.

டெஸ்ட் அணி பந்துவீச்சாளராக அறியப்படும் உமேஷ் யாதவ்க்கு தற்போது டெஸ்ட் அணியிலும் இடம் கிடைப்பதில்லை. தென் ஆப்பிரிக்க தொடரில் ஒரு டெஸ்ட்டில் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று இலங்கை தொடரில் உமேஷ் யாதவ்க்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டியிலேயே நிலைமை இப்படி இருந்தால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சொல்லவா வேண்டும். உமேஷ் யாதவ் கடைசியாக ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. டி20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஐபிஎல் போட்டியிலும் உமேஷ் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

உமேஷ் யாதவ் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாகவே 8 ஓவர் மட்டுமே வீசி இருப்பார். 2021ஆம் ஆண்டு சீசனில் வெறும் ஜூரோ என்றால் பார்த்து கொள்ளுங்கள. அப்படி இருந்த உமேஷ் யாதவ் மீது நம்பிக்கை வைத்த கேகேஆர் அணி அவருக்கு முன்னணி வேகப்பந்து விச்சாளர் என்ற பெருமையை கொடுத்தது. நம் மீது ஒருவர் நம்பிக்கையோ, ஆதரவோ அளித்தால் என்ன செய்ய முடியும் என்பதை உமேஷ் யாதவ் காட்டிவிட்டார்.

சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி உமேஷ் யாதவ் அசத்தினார். இதே போன்று பெங்களூரு அணிக்கு எதிரான 2ஆவது போட்டியின் முதல் ஓவரிலும் விக்கெட்டை சாய்த்த உமேஷ் யாதவ், இன்றும் பஞ்சாப்க்கு எதிராக முதல் ஓவரிலேயே விக்கெட்டை சாய்த்தார் இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் பவர்பிளேவில் உமேஷ் யாதவ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த மைல்கல்லை எட்டும் 3ஆவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை