ஐபிஎல் 2022: ஏலத்தில் வாங்கிய சிறந்த வீரர் அவர் தான் - உமேஷுக்கு டேவிட் ஹஸ்ஸி புகழாரம்!
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இறுதியாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் தொடரிலும், 2018 ஆம் ஆண்டு டி20 தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதற்குப்பின் இவருக்கு இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
தற்போது டெஸ்ட் தொடருக்கான பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கப்பட்ட உமேஷ் யாதவ், நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று 2022 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் சபதம் எடுத்தார்.
அவர் கூறியது போலவே இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் நிற தொப்பியை பெரும் வீரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு வந்துள்ள உமேஷ் யாதவை அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி செய்தியாளர்கள் சந்திப்பில் பாராட்டிப் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், “இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் வாங்கப்பட்ட வீரர் என்றால் அது நிச்சயம் உமேஷ் யாதவ் தான், உமேஷ் யாதவ் தற்பொழுது மிகச்சிறந்த பார்மில் உள்ளார், அவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருணும் நீண்டகாலமாக ஒன்றாக பயணித்துள்ளனர், கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அவர்கள் ஒன்றாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் மத்தியிலும் நல்ல ஒரு பழக்கம் உள்ளது. உமேஷ் யாதவ் குறித்து ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் கடினமாக தன்னை தயார் செய்து கொள்கிறார், மேலும் உமேஷ் யாதவ் தன்னிடம் எனக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை ஏனென்றால் எனக்கு ஆதரவாக எனக்குப்பின் அனைவரும் இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
தற்பொழுது நான் சிறப்பாக செயல்படுகிறது என்றால் அதற்கு பந்துவீச்சு பயிற்சியாளர் அருண் முக்கிய காரணம் என்றும் உமேஷ் யாதவ் தெரிவித்ததாக” டேவிட் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.