ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Apr 26 2024 13:15 IST
Image Source: Cricketnmore

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கேகேஆர் அணி இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும் உள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த தொடரில் விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் வலுவாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் சுனில் நரைன், பில் சால்ட் , ஆண்ட்ரே ரஸல், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி காட்டுகிறார்கள்.

பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரைன், ஆண்ட்ரா ரஸ்செல் வலுசேர்க்கிறார்கள். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். அதேப்போல் வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஷ் ரகுவன்ஷி போன்ற வீரர்களும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து 4 புள்ளிகளுடன் பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பேட்டிங்கில் பிரப்ஷிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிவருகின்றனர். 

பந்து வீச்சில் ஹர்ஷல் படேல், சாம் கரன், அர்ஷ்தீப் சிங், காகிரோ ரபாடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிராரும் தனது வேலையை சரிவர செய்துவருகிறார். இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் நிச்சயம் வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால் அவர்களும் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 21
  • பஞ்சாப் கிங்ஸ் - 11

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

பஞ்சாப் கிங்ஸ்: சாம் கரன் (கே), பிரப்ஷிம்ரன் சிங், ரைலீ ரூஸோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்டர்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்ரவுண்டர்கள்: சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: வருண் சக்ரவர்த்தி, ககிசோ ரபாடா.

KKR vs PBKS Dream11 Prediction, Today Match Prediction, Today Match KKR vs PBKS, KKR vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Punjab Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை