கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு வாய்ப்பு - சச்சினின் கருத்தால் ரசிகர்கல் ஷாக்!

Updated: Tue, Jun 15 2021 19:58 IST
'Knockout Blow': Tendulkar Tips India Quicks To Stun New Zealand (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சவுத்தாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது.

அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 1-0 எனத் தொடரைக் கைப்பற்றி கெத்து காட்டியது. 

இத்தொடர் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. கரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்பு எடுக்க முடிவாகும். இதற்கு ஐசிசியும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கோப்பை வெல்ல நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எப்போது முடிவானது எனத் தெரியவில்லை. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தேர்வான பிறகு இந்த டெஸ்ட் தொடர் முடிவு செய்யப்படவில்லை என நான் நம்புகிறேன். அப்படி முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்த டெஸ்ட் தொடரை நடத்தியிருக்க வேண்டும்.

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மூலம் நியூசிலாந்து அணிக்குக் கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் இரு குழுக்களாகப் பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராகப் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட முடியவில்லை ஒரேயொரு இறுதிப் போட்டி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கக் கூடாது. குறைந்தது மூன்று போட்டிகளையாவது நடத்தினால்தான் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை