ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ஆனால் கேகேஆர் அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது.
அந்த அணியில் ஷிகர் தவான், பிரித்விஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என வலிமையான பேட்டிங் ஆர்டரும், அஸ்வின், நோர்ட்ஜே, ரபாடா என பந்துவீச்சாளர்களும் இருப்பது வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
ஈயான் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி முதல் பாதியில் சொதப்பினாலும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும் சென்னை அணியுடனான போட்டியிலும் வெற்றியின் விழிம்பு வரை வந்து தோல்வியைத் தழுவியது.
இருப்பினும் அந்த அணி இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றால் கூடா பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 27
- டெல்லி வெற்றி -12
- கொல்கத்தா வெற்றி -14
- முடிவில்லை - 1
உத்தேச அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல்/ ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரஷித் கிருஷ்ணா.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், லலித் யாதவ்/ ஸ்டீவ் ஸ்மித், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- மட்டைகள் - ஷிம்ரான் ஹெட்மையர், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி
- ஆல் -ரவுண்டர்கள் - அக்சர் பட்டேல், சுனில் நரைன்
- பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி, லோக்கி ஃபர்குசன்.