கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!

Updated: Thu, Aug 05 2021 17:35 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. 

இதற்கு முக்கிய காரணம் குர்னால் பாண்டியாதான். ஏனெனில் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக குர்னார் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டது மட்டுமல்லாம், அவருடன் சேர்த்த நட்சத்திர வீரர்கள் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே மீதமிருந்த இரண்டு டி20 போட்டியிலும் விளையாடியது. 

இதனால் அனுபவமில்லதாத அறிமுக வீரர்கள் ரன்களை குவிக்கத் தவறினர். இதனால் இலங்கை அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பாற்றியது. இதையடுத்து கடந்த வாரம் இந்திய அணி சொந்தநாடு திரும்பியது. 

இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குர்னால் பாண்டியா, இலங்கையிலேயே மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில் தொற்றிலிருந்து மீண்ட குர்னால் பாண்டியா, இன்று கொழும்புவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::