ஐபிஎல் 2022: குல்தீப் விஷயத்தில் கேகேஆரை சாடிய முகமது கைஃப்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் பொலார்ட், ரோஹித் சர்மா ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளையும்குல்தீப் எடுத்துக்கொடுத்தார்.
ஆனால், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற குல்தீப் யாதவுக்கு ஒரு போட்டியில் கூட அணி நிர்வாகமும், கேப்டன் மோர்கனும்வாய்ப்பு வழங்கவி்ல்லை. குல்தீப் யாதவின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் அவரை பெஞ்சிலேயே அமரவைத்து போட்டியை வேடிக்கை பார்க்க வைத்தனர்.
முதல் போட்டியிலியே டெல்லி கேபிடல்ஸ் அணி குல்தீப் யாதவின் திறமையை உணர்ந்து அவருக்கு வாய்ப்புஅளித்தது.அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தி நிரூபித்துள்ளார்.
இதை முன்னாள் வீரர் முகமது கைஃப் சுட்டிக்காட்டி, கேகேஆர் அணியை விளாசியுள்ளார். அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“குல்தீப் யாதவ் நேற்றைய ஆட்டத்தில் தனது பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்துவிட்டார். குல்தீப் யாதவ் கடந்த முறை கொல்கத்தா அணியில் இருந்தபோது அவருக்கு வாய்ப்பளிக்காமல் இருந்ததால் தொடரந்து விளையாடாமல் இருந்ததால் அவர் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். இதைக் கவனித்த டெல்லி அணி அவருக்கு வாய்ப்பு வழங்கி திறமையைநிரூபிக்க வாய்ப்பளித்தது.
குல்தீப் யாதவும் மேட்ச் வின்னராக மாறினார். அவரை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்அவசியம். குல்தீப் இயல்பாகவே உணர்ச்சிவசப்படக்கூடியவர், அவருக்கு பந்துவீச வாய்ப்பளிக்காவிட்டாலும், அல்லது அணியிலிருந்து நீக்கினாலும், அவர் அழுதுவிடுவார்.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் மட்டுமல்லாது சிலஆண்டுகளாக அவரை நடத்தியவிதம் சரியல்ல. அதிலும் தினேஷ் கார்த்திக், மோர்கன் இருவருக்குமே குல்தீப் யாதவை பயன்படுத்த தெரியவில்லை. அவரை பெஞ்சிலேயே அமரவைத்து அணிக்குள் கொண்டுவராமல் இருந்துவிட்டார்கள். இவ்வாறு ஒரு வீரரை நடத்தினால், எந்த வீரராக இருந்தாலும், மனஅழுத்தத்தைத்தான் சந்திப்பார்கள்
அக்ஸர் படேலின் ஆட்டம் மற்றொரு ரவி்ந்திர ஜடேஜா போன்றுஇருந்தது. ரவிந்திர ஜடேஜா வாழ்க்கை போன்றுதான் அக்ஸர் படேலின் வாழ்வும் தொடங்கியது. புதிய வீரராக வந்தபோது ஜடேஜா சிறப்பாக பந்துவீசினார், ஆனால், பேட்டிங்கை காலப்போக்கில்தான் மெருகேற்றினார். அக்ஸர் படேலுக்கு சிறந்த பேட்டிங் திறமைஇருக்கிறது, பும்ரா பந்துவீச்சில்கூட சிக்ஸர் அடிக்கும் திறமை அக்ஸரிடம் இருக்கிறது. ஆட்டத்தை பினிஷ் செய்ய நினைக்கும் வீரர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டும் அதுஅக்ஸரிடம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.