தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இரு அணிகளும் தற்போது தயாராகி வருகின்றன.
Advertisement
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குசால் பெரேராவுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இதனை இலங்கை கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த சக வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இவர் இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்ததன் காரணமாக, இந்தியாவுடனான தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.