ஜீனியர்களைப் பாராட்டிய அஸ்வின்!
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச் சுற்றுக்கு 8ஆஅவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் எந்த அணியும் இந்த தொடரில் 200 ரன்களை எட்டியது இல்லை.
ஆனால் இந்திய அணி 290 ரன்களை எட்டி மற்ற அணிகளை மெர்சல் ஆக்கியது. குறிப்பாக கரோனா பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட இந்திய வீரர்கள் தடையை மீறி சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ரஷித், சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 204 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. சிறப்பாக விளையாடிய யாஷ் துல் சதம் விளாசினார். ரஷித் 94 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் அண்டர் 19 வீரர்களை பாராட்டிய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், “யாஷ் துல் முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். இதே போன்று ரஷித் ஆட்டத்தை பார்த்து பிரமித்து போனேன்” என வாழ்த்தியுள்ளார்.
இதே போன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவின் பேட்டிங் அற்புதமாக உள்ளதாக பாராட்டினார். மேலும் யாஷ் துல், ரஷித் போன்ற வீரர்கள் இருப்பதால் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக மைக்கேல் வாகன் குறிப்பிட்டார். இந்தியா, இங்கிலாந்து இறுதிப் போட்டியை காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.