வேதா கிருஷ்ணமூர்த்தியை புறக்கணித்த பிசிசிஐ - கொந்தளித்த ஆஸி வீராங்கனை. 

Updated: Sat, May 15 2021 16:57 IST
Image Source: Google

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இவரது தாய் மற்றும் சகோதரி இருவரும் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த அணியில் இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வேதா கிருஷ்ணமூர்த்தியை வேண்டும் என்றே பிசிசிஐ புறக்கணித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா ஸாலேகர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய லீசா,“வேதா கிருஷ்ணமூர்த்தி தற்போது தான் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து தவித்து வருகிறார். ஆனாலும், அவர் பிசிசிஐயின் ஒப்பந்த வீராங்கனையாவர். அப்படி இருக்கையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறாதது ஆச்சரியமாக உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து தொடர் குறித்த அறிவிப்பை கூட பிசிசிஐ அவருக்கு அனுப்பவில்லை. இதனால் பிசிசிஐ வேண்டும் என்றே தான் வேதாவை புறக்கணித்துள்ளது” என்று சர்ச்சையை கிள்ளப்பியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை