எல் எல் சி 2022: கெவின் ஓ பிரையன் காட்டடி; ஆசிய லையன்ஸுக்கு 206 இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 2ஆவது போட்டியில் உலக ஜெயண்ட்ஸ் - ஆசிய லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லையன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய உலக ஜெயண்ட்ஸ் அணியில் கெவின் பீட்டர்சன் 14 ரன்னிலும், பில் மஸ்டர்ட் 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரையன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 95 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய கோரி ஆண்டர்சன், டேரன் சமி, ஓவைஸ் ஷா ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் அல்பி மோர்கல் ஒரு சில பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 200 ரன்களைச் சேர்த்தது. ஆசிய லையன்ஸ் அணி தரப்பில் குலசேகர,முகமது ஹபீஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.