எல்எல்சி 2022: கிப்ஸ், முஸ்டர்ட் அபாரம்; இந்தியா மஹாராஜஸ்க்கு 229 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Jan 27 2022 21:49 IST
Image Source: Google

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் - இந்தியா மஹாராஜஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மஹாராஜாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணியில் கெவின் பீட்டர்சன் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பில் முஸ்டர்ட் - ஹர்ஷெல் கிப்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின்னர் 57 ரன்னில் முஸ்டர்ட் ஆட்டமிழக்க, 89 ரன்னில் கிப்ஸும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரையன் தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முனாஃப் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை