எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா கேப்பிட்டல்ஸ்!

Updated: Thu, Oct 06 2022 12:56 IST
Taylor, Johnson Shines As India Capitals Crowned The Champions Of Legends League Cricket (Image Source: Google)

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பந்துவிச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் கவுதம் காம்பீர் 5, டுவைன் ஸ்மித் 3, ஹாமில்டன் மஸகட்சா 1, தினேஷ் ராம்டின் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் - மிட்செல் ஜான்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். 

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 35 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரிகள் என 62 ரன்களைச் சேர்த்திருந்த மிட்செல் ஜான்சன் ஆட்டமிழந்தார். 

அதன்பின் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 82 ரன்களைச் சேர்த்திருந்த ராஸ் டெய்லரும் ஆட்டமிழந்தார். இறுதில் ஆஷ்லே நர்ஸ் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை பறக்கவிட்டார். இப்போட்டியில் 19 பந்துகளை எதிர்கொண்ட நர்ஸ் 42 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்தது. பில்வார கிங்ஸ் அணி தரப்பில் ராகுல் சர்மா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணியில் வேன் வைக் 5, போட்டர்ஃபீல்ட் 12, யூசுப் பதான் 6, ஷேன் வாட்சன் 27, இர்ஃபான் பதான் 2 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் பில்வாரா கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் பில்வாரா கிங்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை