எல்எல்சி 2022: மணிபால் டைகர்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் - மணிபால் டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணியில் டைபு 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெஸ்ஸி ரைடர் - முகமது கைஃப் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 79 ரன்களில் ரைடர் ஆட்டமிழக்க, 67 ரன்களில் கைஃபும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் மிடிவில் மணிப்பால் டைகர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியில் வழக்கம்போல் கௌதம் காம்பீர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சாலமன் மீர் 28 ரன்களில்ல் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்சா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 39 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரிகள் என 68 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினா.
இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பால் டைகர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.