ஐபிஎல் 2022: தோல்வியை ஒரு பாடமாக ஏற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, May 04 2022 12:09 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. ஷிகர் தவான் 62 ரன்னும், பானுகா ராஜபக்சே 40 ரன்னும், லிவிங்ஸ்டன் 10 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர்.

குஜராத் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று இருந்தது. அதற்கு பஞ்சாப் முட்டுக்கட்டை போட்டது. இந்த ஐபிஎல் தொடரில் புதுமுக அணியான குஜராத் சிறப்பாக விளையாடுகிறது. அந்த அணி சேசிங் செய்வதில் நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்தும் குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் 170 ரன் எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். முதலில் பேட்டிங் செய்ததற்கான எனது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு சீரான பாதைக்கு திரும்புவதில் முயற்சிக்க வேண்டும். நாங்கள் நன்றாக சேசிங் செய்து வருகிறோம்.

ஆனால் எங்களது பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை உறுதிசெய்ய விரும்பினோம். ஆனால் சரியான ஆட்டம் வரும்போது முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது பற்றி ஆலோசித்து அதில் கவனம் செலுத்துவோம். தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இருந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை