இந்த வெற்றி எங்களின் கூட்டு முயற்சிக்கான வெற்றி - ரிஷி தவான்!

Updated: Mon, Dec 27 2021 11:43 IST
Image Source: Google

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் நேற்றுடன் முடிவடைந்தது.  

இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தில் ஹிமாச்சல பிரதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் ஹிமாச்சல் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதற்கு எங்களில் கடின உழைப்பே காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரிஷி தவான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது, இறுதியாக நாங்கள் கோப்பையைக் கைப்பற்றி விட்டோம். உண்மையிலேயே இது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் இங்கு சில போட்டிகளில் விளையாடியிருந்தோம், எனவே ஆடுகளம் நன்றாக இருந்தது மற்றும் அவுட்ஃபீல்ட் மிக விரைவாக இருந்தது. எனவே நாங்கள் இலக்கை எளிதாக அடையளாம் என்றும் நினைத்தோம். 

நான் சுபமிடம் எந்த அழுத்தத்தையும் எடுக்க வேண்டாம், ஒரு சிங்கிள் எடு, நான் அழுத்தத்தை கையாளுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கேற்றார் போலவே நாங்கள் விளையாடினோம்.

இந்த கோப்பையை வென்றதில் எங்களின் கடின உழைப்பு உள்ளது. மேலும், நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக வசதிகளை மேம்படுத்தியுள்ளது, அதுவும் எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. இந்த வெற்றி எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை