இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா மற்றும் கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

Advertisement

அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 15 ரன்களுக்கும், ஷெவோன் டேனியல் 7 ரன்களுக்கும், சாத் பௌஸ் 22 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சொஹன் டி லிவெரா 12 ரன்களுக்கு அடடமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதன்பின் கள்ளமிறக்கிய லஹிரு சமரகூன், ரஜிதா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. தம்புலா அணி தரப்பில் துஷன் ஹெமந்தா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குசால் மெண்டிஸ் 18 ரன்களுக்கும், அடுத்து களமிறக்கிய சதீரா சமரவிக்ரமனா 25 ரன்களுக்கும், குசால் பெரேரா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தம்புலா ஆரா அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கலே டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News