லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கலே கிளாடியேட்டர்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்ஷ 23 ரன்களை எடுத்திருந்தார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஜாஃப்னா கிங்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக அந்த அணி 109 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.