ஐபிஎல் 2024: ஜஸ்டிங் லங்கருடன் சிறப்பு பயிற்சி எடுக்கும் தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!

Updated: Thu, Mar 21 2024 13:10 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

அதன்படி அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் அணி வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் லக்னோ அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் தீபக் ஹூடாவிற்கு ஜஸ்டின் லங்கர் பேட்டிங் பயிற்சியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு தேர்வான தீபக் ஹூடா, தனது ஃபார்மை இழந்ததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் கடந்த ஐபிஎல் சீசனிலும் பெரிதளவில் சோபிக்க தவறிய தீபக் ஹூடா அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பை பெற்றாலும் அதிலும் போதிய ரன்களை சேர்க்கமுடியாமல் தவித்தன் காரணமாக, லக்னோ அணியால் எலிமினேட்டர் சுற்றைத் தாண்டி பயணிக்க முடியவில்லை. 

 

இதன் காரணமாகவே ஜஸ்டின் லங்கர், தீபக் ஹூடாவை தீவிரமாக கவனித்து வருவதாகவும், அவருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நடப்பு சீசனில் ஜஸ்டின் லங்கரின் பயிற்சியின் கீழ் தீபக் ஹூடாவின் செயல்பாடுகள் எவ்வறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கௌதம், க்ருனால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பிரேராக் மன்காட், யுத்வீர் சிங் சரக், டேவிட் வில்லி, அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், ஷமார் ஜோசப், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை